அதிக வேகமாக வந்த ரயில் ரீல்ஸ் எடுத்த சிறுவன் உயிரை பறித்த சோகம்...!!!
ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் 15 வயது விஷ்வஜித் சாகு என்ற சிறுவன் தாயுடன் கோவில் தரிசனத்துக்குச் சென்றிருந்தான்.
பூஜை முடிந்தபின் அருகிலுள்ள தண்டவாளத்தில் மொபைலில் ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்றபோது அங்கு வேகமாக வந்த ரயில் நேரடியாக மோதியது.
அந்த இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
