தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக பிறப்பு, இறப்பு, திருமணச் சான்றிதழ்களை விநியோகிப்பதற்கான நிகழ்நிலை சேவை செயலிழந்துள்ளது.
இதன் காரணமாகக் குறித்த சான்றிதழ்களைப் பிரதேச செயலகங்களில் சாதாரண சேவையூடாக பெற்றுக் கொள்ள முடியும் எனப் பதிவாளர் நாயகம் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, செயலிழந்துள்ள நிகழ்நிலைச் சேவையை வழமைக்குத் திருப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
