கட்டுவன்வில ஊர் பிரமுகர்களால் சுற்றி வளைத்து பிடிக்கப்பட்ட ஐஸ் போதைப் பொருள் வியாபாரிகள் இருவர்.
5870 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மற்றும் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்த பணம் என்பனவும் கைப்பற்றப்பட்டது.
வெலிகந்த கட்டுவன்வில கிராமத்தில் ஐஸ் போதைப்பொருள் விற்பணையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் ஐஸ் போதைப்பொருள் மற்றும் அதனை விற்பணை செய்த பணம் என சந்தேகிக்கப்படும் 64000/= ரூபாய் பணத்துடன் ஊர் பிரமுகர்களால் பிடிக்கப்பட்டு (05) காலை வெலிகந்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த இளைஞர்கள் நீண்ட காலமாக ஐஸ் போதைப் பொருளை இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதுடன் கட்டுவன்வில ஜும்மா பள்ளிவாயல் நிருவாகிகள் மற்றும் ஊர் பொது நிறுவனங்களின் உறுப்பினர்களும் ஒன்றினைந்து இவர்களைச் சுற்றி வளைத்து பிடித்துவந்து பள்ளிவாயல் வளாகத்தில் கட்டிவைத்து விசாரனை செய்து வெலிகந்தை பொலிசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனர்..
சந்தேக நபர்களான போதைப் பொருள் வியாபாரிகள் கட்டுவன்விலயில் வசித்துவந்த வயது 25 மற்றும் 34 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் வெலிகந்த பொலிஸ் நிலையத்தில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விசாரித்தபோது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எல்.பி.ஆர். குமாரசிங்க அவர்கள் கூறியபோது ஒரு சந்தேக நபரிடம் இருந்து 3100 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும் மற்றைய சந்தேக நபரிடமிருந்து 2770 மில்லி கிறாம் போதைப்பொருட்கள் இருந்ததாகவும் கூறினார். மேலும் ஐஸ் போதைப்பொருள் விற்பணைசெய்து பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ருபா 64000/= பணம் அவர்களிடம் இருந்ததாகவும் கூறினார்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் ஐஸ் போதைப் பொருளை பொலனறுவை நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் வெலிகந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குமாரசிங்க அவர்கள் கூறினார்

