யாழ் ஏழாலை இளம் பெண் வாகன வித்தில் பலி : திருமணம் செய்து ஒரு வருடத்தில் பெரும் துயரம் !
கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையதனதிற்கு செல்லும் போது ஏற்பட்ட வாகன விபத்தில் இளம் குடும்பப் பெண் உயிரிழந்துள்ளார்
இன்று அதிகாலை 3:00 மணியவில் அனுரதபுரதிற்கு அண்மையில் இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது
இச் விபத்து சம்பவத்தில் ஏழாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த அகிலன் திவியா வயது 31என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் ,
குறித்த பெண் திருமணம் செய்து ஒரு வருடமான நிலையில் இவ் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
கணவர் ஏழாலைப் பகுதியில் கிராம சேவையாளராக பணிபுரிந்து வருகின்றார் ,
இவ் விபத்து சம்பவத்தில் மேலும் ஒரு வயோதிபப் பெண்ணும் உயிரிழந்துள்ளார் மேலதிக இழப்பு விபரம் அறியமுடியவில்லை
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
