துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து லண்டனுக்குச் சென்று கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
142 பயணிகளை ஏற்றிச் சென்ற ஏர்பஸ் A320 என்ற குறித்த விமானம் நடுவானில் சென்றபோது விமானத்தில் இருந்து திடீரென புகை வெளியேறியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பயணித்த 4 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
Plane Makes Emergency Landing After 4 Passengers Suffer Possible Smoke Inhalation, Authorities Say https://t.co/hvWMlCzoOg
— People (@people) October 10, 2025
இதையடுத்து ருமேனியா தலைநகர் புக்காரெஸ்ட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானம் தரையிறங்கியதும் அங்கு தயாராக இருந்த மீட்புக்குழுவினர் பயணிகளை பத்திரமாக வெளியேற்றியுள்ளனர்.
அதன்பின் மூச்சுத் திணறல் ஏற்பட்ட 4 பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதுடன், இது குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
