அரக்கன் உருவத்தில் தாய்... தாய்க்கு வந்த பிரச்சினையால் வந்த ஆத்திரத்தில் இரண்டு குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற தாய்..!!!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் மிர்சாபூர் மாவட்டம் செம்ரி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிசந்திரா. அவரின் மனைவி சங்கீதா (வயது 35).இத்தம்பதிக்கு சிவாஸ் (3), சுபன்கர் (1) என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று மாலை சங்கீதா திடீரென தனது இரண்டு குழந்தைகளையும் கழுத்து நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பிறகு வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வேலை முடிந்து வீடு திரும்பிய ஹரிசந்திரா மனைவி மற்றும் குழந்தைகள் உயிரிழந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
முதற்கட்ட விசாரணையில் சங்கீதா சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
