நாட்டிலுள்ள கல்வியியற் கல்லூரிகளிலும் ஆசிரியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என்று பிரதமரும் உயர்கல்வி அமைச்சருமான பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற கேள்வி மீதான அமர்வில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் எமது அரசாங்கம் உள்ளது. அதற்கிடையில் கல்வியற்கல்லூரிகளிலும் பட்டங்கள் வழங்கப்பட வேண்டும். அதற்குரிய பணிகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
அந்த வகையில் குளியாப்பிட்டிக் கல்லூரியைப் பட்டமளிக்கும் கல்லூரியாக தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஏனைய 19 கல்வியியற் கல்லூரிகளையும் பட்டங்கள் வழங்கும் கல்வியற் கல்லூரிகளாக மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம்.- என்றார்.
