பதுளையில் பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டகமுவ பகுதியில் உள்ள மரக்கறி தோட்டத்தில் நேற்று புதன்கிழமை (08) மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பண்டாரவளை, வட்டகமுவ பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய பெண் ஆவார்.
இவர், மரக்கறி தோட்டத்தில் உள்ள தண்ணீர் மோட்டருடன் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்பை இயக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
