மதுபான உற்பத்திக்கான வரி மற்றும் கட்டணத்தை நிச்சயிக்கப்பட்ட தினத்தில் இருந்து 90 நாட்களை அண்மித்த காலத்துக்காக செலுத்தாவிடின் குறித்த மதுபான உற்பத்தியாளருக்கு வழங்கப்பட்ட சகல அனுமதிப்பத்திரங்களும் இரத்துச் செய்யப்படும்.
அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்யும் காலவகாசம் இதற்கு முன்னர் 6 மாதங்களாக நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அந்த கால எல்லை 3 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.மதுபான உற்பத்திகளுக்கான வரி செலுத்தும் கால எல்லை மற்றும் கட்டணம் அறவிடுதலுக்கு உரிய விதிமுறைகளை திருத்தம் செய்து, புதிய வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சரான ஜனாதிபதியின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று செவ்வாய்க்கிழமை (28) அமுலுக்கு வரும் வகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
மதுவரி செலுத்தாமல் இருப்பதை தவிர்க்கும் நோக்கில் இந்த வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய சகல அனுமதிப்பதிரமுடையோர் மதுவரி கட்டளைச் சட்டத்தின் 22 ஆம் உறுப்புரையின் பிரகாரம் நிச்சயிக்கப்பட்ட திகத்தில் அல்லது அந்த தினத்துக்கு முன்னர் வரிச் செலுத்த வேண்டும்.
நிச்சயிக்கப்பட்ட தினத்துக்குள் வரிச் செலுத்த தவறும் பட்சத்தில் செலுத்த வேண்டிய வரிக்கு மேலதிகமாக இலகு நிகழ்நிலை முறைமைக்கு அமைய கணக்கிடப்பட்ட வகையில் மாதத்துக்கு 3 சதவீத கட்டணத்தை அனுமதிப்பத்திரமுடையோர் செலுத்த வேண்டும்.
நிச்சயிக்கப்பட்ட தினத்தில் இருந்து 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டிய வரி அல்லது கட்டணத்தை முழுமையாக செலுத்துவதற்கு தவறும் அனுமதிப்பத்திரமுடையவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 'போத்தலாக வடிவமைக்கும்' அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னர் இந்த சட்டம் அமுல்படுத்தப்படாத நிலையில் அது தற்போது புதிய சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என மதுவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நிச்சயிக்கப்பட்ட தினத்தில் இருந்து 90 நாட்களை அண்மித்த காலத்துக்காக செலுத்த வேண்டிய வரி அல்லது கட்டணத்தை செலுத்தாவிடின் குறித்த மதுபான உற்பத்தியாளருக்கு வழங்கப்பட்ட சகல அனுமதிப்பத்திரங்களும் இரத்துச் செய்யப்படும்.
அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்யும் காலவகாசம் இதற்கு முன்னர் 6 மாதங்களாக நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அந்த கால எல்லை 3 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது
