பிரபல பாதாள உலகக் குழு தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடனான தொடர்பு தொடர்பில் இலங்கயைின் பிரபல நடிகை ஸ்ரீமாலி ஃபொன்சேகா விளக்கம் அளித்துள்ளார்.
ஸ்ரீமாலியிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அண்மையில் விசாரணை நடத்தி உள்ளனர்.
தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் கெஹெல்பத்தர பாத்மே தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக ஸ்ரீமாலியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கெஹல்பத்தர பத்மேவுடன் ஸ்ரீமாலி பொன்சேகா எடுத்துக் கொண்ட புகைப்படத்தின் அடிப்படையில் இந்த வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், குறித்த புகைப்படம் எடுக்கப்பட்ட வேளையில் கெஹல்பத்தர பத்மே ஓர் பாதாள உலகக்குழு உறுப்பினர் என்பது தமக்கு தெரியாது என ஸ்ரீமாலி ஃபொன்சேகா தெரிவித்துள்ளார்.
அந்த இடத்தில் பலரும் தம்முடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்ததாகவும், அதில் குறித்த புகைப்படமும் ஒன்றாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த புகைப்படம் ஒரு புத்தாண்டு விழாவில் எடுக்கப்பட்டதாகவும், அந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டதாகவும், தமக்கும் அந்த புகைப்படத்தின் நகல் இருப்பதாகவும் ஸ்ரீமாலி ஃபொன்சேகா கூறியுள்ளார்.
குறித்த புத்தாண்டு நிகழ்வு டுபாயில் நடைபெற்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
