யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நூலகத்தின் மேற்புறத்தில் இருந்து இரண்டு மகசின்களும் (துப்பாக்கிக்கு குண்டுகள் போடப்படும் பாகம்) வயர்களும் மீட்கப்பட்டுள்ளன்.நேற்றையதினம் குறித்த பகுதியை சுத்தம் செய்தவேளை குறித்த பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து கோப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அந்த துப்பாக்கி பாகங்கள் இரண்டையும், வயர்களையும் மீட்டுச் சென்றனர்.