குருணாகல் நிக்கவெரட்டிய பகுதியில் பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமான மாற்றியமைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவனும், அதிபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 மற்றும் 15 வயதுடைய மூன்று சிறுமிகளின் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமான புகைப்படங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவர், மாணவிகளின் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்களை மாற்றியதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த புகைப்படங்கள் அடங்கிய கையடக்க தொலைபேசியை கைப்பற்றிய இரண்டாவது சந்தேக நபரான அதிபர் இது குறித்து பொலிஸாருக்கு தெரிவிக்காமல் பிரச்சினையை தீர்க்க முயன்றுள்ளார். மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்கள் அடங்கிய கையடக்க தொலைபேசியை ஒரு மாதத்திற்கும் மேலாக அதிபரின் வசம் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்ததாக நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
