நீர்கொழும்பு, ஏத்துக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரையில், கடலில் அடித்து செல்லப்பட்ட ஒரு பெண்ணை பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மீட்டுள்ளனர்.
ஏத்துக்கல பொலிஸ் உயிர்காக்கும் பிரிவின் காவலர் கோரலகே, காவலர் லக்ஷன், 105320 விஜேசிங்க மற்றும் காவலர் சமித ஆகியோரே குறித்த பெண்ணை மீட்டுள்ளனர்.
