மழையின் தாக்கத்தால் அனுராதபுரம் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 28 வீடுகளும் சேதமடைந்துள்ளது
கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக அனுராதபுரம் மாவட்டத்தில் ஒரு உயிர் சேதமும் பல வீடு சேதமடைந்த சம்பவம் பதிவாகியுள்ளன. தம்புத்தேகம குருகம பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஒருவர் நீரில் சிக்கி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கெகிராவ பிரிவில் ஐந்து வீடுகள், கலன்பிடுனுவெவவில் இரண்டு வீடுகள், நொச்சியாகமத்தில் மூன்று வீடுகள், தம்புத்தேகமத்தில் 13 வீடுகள், கிழக்கு நுவரகம் மாகாணத்தில் ஒரு வீடு, மதவாச்சியில் ஒரு வீடு என 28 அரை வீடுகள் சேதங்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட பேரிடர் நிவாரண சேவை அதிகாரி திருமதி கங்கா ஹேமமாலி குறிப்பிடுகிறார்.








