மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மஸ்கெலியா மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தில் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பி.வை.எம்.சி.லக்ஸ்மன் என்ற 32 வயதுடைய நபர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு மீட்கப்பட்ட நபர் திருமணமான ஒரு குழந்தையின் தந்தை எனவும் மஸ்கெலியா நோட்டன் வீதி புரவுன்லோ வட்டாரத்தில் வசிப்பவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
சடலத்தை ஹட்டன் நீதிமன்ற நீதவான் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி வந்து பார்வை இட்ட பின்னர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
