வெலிகம பிரதேச தலைவர் லசந்த விக்கிரமசேகர கொலை 15 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தின் நடத்தப்பட்டது. இந்தக் கொலை 'டுபாய் லொக்காவின்' ஒப்பந்தம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மாறுவேடமிடக்கூடிய அனைத்து வழிகளையும் அனுமானித்து, புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்களைத் தயாரித்து, பொலிஸ் அதிகாரிகள் உட்பட அனைத்து விசாரணை அதிகாரிகளின் கைப்பேசிகளுக்கும் அனுப்பினர்.
கொழும்புக்கு வந்த சந்தேக நபர், அங்கிருந்து பொரளை சஹஸ்புர வீட்டுத் தொகுதிக்கு சூசகமான முறையில் சென்று, அங்கு தனது தோற்றத்தை மாற்றியமைக்க தலைமுடியை வெட்டி, உடைகளை மாற்றிக்கொண்டுள்ளார்.
போதைப்பொருளுக்கு அடிமையான அவர், இந்த பயணத்தின் நடுவிலும் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருளைத் தேடியுள்ளார்.
கொலைக்கான ஒப்பந்தத் தொகையின் ஒரு பகுதியை அவர் பெற்றுள்ளதாகவும், மீதமுள்ள பணத்தைப் பெற மஹரகம நகருக்கு சென்றுள்ளதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
மஹரகம நகரில் உள்ள போதி மரத்திற்கு அருகில் இருந்த ஒரு தொலைபேசி கடைக்குள், அவர் ஒரு மொபைல் போன் சார்ஜரை வாங்குவதற்காகச் சென்றுள்ளார். அப்போது சந்தேக நபருக்கு டுபாயில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில், தன்னிடமுள்ள மொபைல் போனை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இதன்படி, மொபைல் போன் கடையிலிருந்து வெளியே வந்த சந்தேக நபர், பல விசாரணை அதிகாரிகளின் கூர்மையான கண்களுக்கு மத்தியிலும் மீண்டும் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.
மஹரகம பகுதியில் இருந்து சந்தேக நபரைப் பின்தொடர்ந்து வந்த கண்காணிப்பு அதிகாரி ஒருவர், குறித்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்பதைத் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியவுடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவரைத் தேடும் நடவடிக்கைகளுக்காக அதிகாரிகள் தயார் செய்திருந்த வாட்ஸ்அப் குழுமத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மீது 5 திருட்டு வழக்குகள், 2 கொள்ளை வழக்குகள், ஆயுதம் வைத்திருந்தமை உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
