அதனால், மோட்டார் வாகனங்களின் ஆண்டு அனுமதிப்பத்திரம் புதுப்பிப்பு தற்போது மேற்கொள்ள முடியாது என உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
சிஸ்டம் வழமை நிலைக்கு திரும்பும் வரை, பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவிப்புப் பிரசுரங்களின் புகைப்படத்தை தங்களுடன் வைத்திருப்பதையும், போலீசார் சோதனைக்கு இடைநிறுத்தும் போது அதை காண்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது நாடு பூராகவும் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்சனை என்பதால்,
அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அரசு தரப்பில் இருந்து அல்லது பிரதேச செயலகங்களின் மூலமாக போலீஸ் நிலையங்களுக்கு வழங்கப்படுவது அவசியம்.
இவ்வாறு செயல்பட்டால்,
➡️ மக்கள் தேவையில்லாமல் அலைய வேண்டிய நிலை தவிர்க்கப்படும்.
➡️ போலீசாருக்கும் மக்களுக்கும் இடையில் தேவையற்ற குழப்பம் ஏற்படாது.
ஒரு மக்கள் பிரதிநிதியாக,
இந்த விடயத்தை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
மக்களின் இலகு மற்றும் நலனுக்காக தேவையான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படுமென நம்புகிறேன்.
