எமது Tamil plus ஊடகத்திற்கு ஊடகவியளார்கள் தேவை-விருப்பமுடையவர்கள் எம்முடன் தொடர்கொள்ளவும்

பிரபல வங்கி அதிரடி முடிவு-மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

கொமர்ஷல் வங்கியானது இளைஞர்களின் தேவைகளைப் புரிந்து, அவர்களைத் தமது இலக்குகளை அடைய வலுப்படுத்தும் நோக்கத்தின் ஒரு பகுதியாக, ஆசிய பசிபிக் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் (APIIT) புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. கொமர்ஷல் வங்கியானது இதன் மூலம், உயர்கல்வி பயிலும் மாணவர்களிடையே வங்கியின் கல்விக் கடன் வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

கொமர்ஷல் வங்கியானது இந்த ஒத்துழைப்பின் கீழ், APIIT மாணவர்களுக்கு அவர்களின் கல்விசார் இலக்குகளை அடைய மிகக் கவர்ச்சிகரமான மற்றும் பொருத்தமான வட்டி வீதத்தைக் கொண்ட கடன் வசதிகளை வழங்கவுள்ளது. வங்கியின் கல்விக் கடன்கள், கல்விநெறிக் கட்டணத்தில் 90% வரை (அதிகபட்சம் ரூ. 1 கோடி வரை) வழங்கப்படலாம். அத்துடன், மடிக்கணினி ஒன்றினைக் கொள்வனவு செய்வதற்கான கடன் கொள்வனவில் 100% வரை (அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வரை) வழங்கப்படும். மேலும், இந்த கடன் வசதியில் மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் வரை மீளச்செலுத்தும் கால அவகாசத்தினைப் பெறுவதோடு, ஆவணக் கட்டணங்களில் 50% வரை விலக்கு வழங்கப்படும் எனவும் வங்கி தெரிவித்துள்ளது. APIIT என்பது இலங்கையில் கணினி, வர்த்தகம், சட்டம் மற்றும் தொடர்புடைய துறைகளில் டிப்ளோமா, இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரி கல்விநெறிகளை வழங்கும் ஒரு முன்னணி தனியார் உயர்கல்வி நிறுவனமாகும். இது இங்கிலாந்தில் உள்ள Staffordshire பல்கலைக்கழகம் மற்றும் மலேசியாவில் உள்ள Asia Pacific University of Technology and Innovation உடன் இணைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஒத்துழைப்பானது மாணவர்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த கல்வித் துறைகளை இலகுவான நிதி வசதியுடன் தொடர வாய்ப்பளிப்பதுடன் மற்றும் எதிர்காலத்திற்கான தொழில்திறனை விருத்தி செய்வதற்கான பங்களிப்பினையும் வழங்குகிறது. இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழும் கொமர்ஷல் வங்கி, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும். 

கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. 

மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.