கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக பிச்சை எடுத்த பெண் ...வீடு நிறைய பணம் 1லட்சத்துக்கு மேலாக இருக்கிறது என தகவல்.
உத்தரகண்ட் மாநிலத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக வீடுகளுக்கு வெளியே பிச்சை எடுத்து வந்துள்ளார்...
அப்பகுதியினரால் அவரை அங்கிருந்து நீக்க முயற்சி செய்யப்பட்டபோது அவரிடம் இருந்த இரண்டு பைகளில் பெரிய அளவில் பணம் இருப்பது தெரியவந்தது.
ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்புடைய காசுகள், நோட்டுகள் அடங்கியிருந்தன. இந்த தகவல் அப்பகுதியில் பரவி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதிகாலை தொடங்கிய பண எண்ணிக்கை மாலை வரை தொடர்ந்தது. ஏற்கனவே ரூ.1 லட்சத்துக்கும் மேல் எண்ணப்பட்டு விட்டதாகவும், இன்னும் பணம் முழுமையாக எண்ணப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்...
#viral #cash
