OyO வில் வேறொரு பெண்ணுடன் சிக்கிய கணவன். மனைவி வெளுத்து வாங்கிய தருணம்...!!!
உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில், ஒயோ ஹோட்டல் அறையில் ஒரு பெண் தன் கணவனை அடிப்பதாகக் காட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
திங்கள்கிழமை ஹைவே 9 அருகே உள்ள திடௌலி போலீஸ் நிலையப் பகுதியில் இது நடந்தது. கணவன் வேறு பெண்ணுடன் ஹோட்டலில் இருப்பதாக தகவல் கிடைத்ததும், அந்தப் பெண் உறவினர் ஒருவருடன் சென்று அறைக்கு வெளியே சண்டை போட்டார்.
கணவன் அறையைப் பூட்டிக் கொண்டு உள்ளே இருக்க, பெண் "கதவைத் திறக்காவிட்டால் உடைத்துவிடுவேன்" என்று மிரட்டி கத்துகிறார்.
சிறிது நேரத்தில் கணவன் கதவைத் திறக்க, கையில் செருப்புடன் காத்திருந்த பெண் அவரை அடிக்கத் தொடங்குகிறார்.
அறையில் பர்தா அணிந்த வேறொரு பெண்ணும் தெரிகிறார்..
ஒயோ ஹோட்டல் உள்ளூர் பாஜக தலைவர் ஒருவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.
வீடியோ பரவலாகப் பகிரப்பட்டாலும், பெண் கணவன் மீது போலீஸில் புகார் அளித்தாரா என்பது தெரியவில்லை.
