யாழ்ப்பாணம் சங்குபிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி தொடர்பில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த யுவதி முகம் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மிதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம்(12) பெண்ணின் சடலம் சங்குபிட்டி பாலத்திற்கு அருகே கரையொதுங்கியுள்ளது.
18 முதல் 22 வயதிற்குட்பட்ட பெண்ணின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் உயிரிழந்த பெண்ணின் விபரம் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் யுவதி பலரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2015 மே மாதத்தில் யாழ்ப்பாணம் புங்குடுதீவு கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையை மட்டுமல்லாது உலகையே உலுக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
