நாடு முழுவதும் மக்கள் குறைகளைக் கேட்டு வரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சில சமயங்களில் கேட்கப்படும் கேள்விகள் ஜனாதிபதி சஜித் பிரேமதாசாவை நோக்கியே தொடுக்கப்படுவது போன்ற ஓர் உணர்வை தான் அடைவதாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், “நான் நாடு முழுவதிலும் உள்ள மக்களைச் சந்திக்கும்போது, அவர்களின் குறைகளையும் துயரங்களையும் கேட்கும்போது, சில சமயங்களில் மக்கள் என்னைப் பார்த்து எழுப்பும் கேள்விகள், ஒருவேளை நான் தான் ஜனாதிபதி என்ற நிலையில் இருந்தால் எனக்குத்தான் நேரடியாகக் கேட்கப்படுகிறதோ என்று என் உள்ளத்தில் ஓர் உணர்ச்சி ஏற்படுகிறது,” என்று கூறியுள்ளார்.
