கட்டுவன்வில - வெலிகந்த பிரதான வீதியில் வேன் ஒன்று வீதியைவிட்டு விலகி காட்டுப் பகுதியினுள் கவிழ்ந்து விபத்து. ஒருவர் வபாத்.
கட்டுவன்வில - வெலிகந்த பிரதான வீதியில் அதுகலையை அன்மித்த பகுதியில் கட்டுவன்விலயைச் சேர்ந்த குடும்பத்தினர் பயனித்த சிறிய ரக வேன் ஒன்று வீதியைவிட்டு விலகி காட்டுப் பகுதியினுள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சம்பவத்தை கேள்வியுற்ற பிரதேசவாசிகள் சம்பவ இடத்திற்க்குச் சென்று வேனில் சிக்குண்டவர்களை மீட்டு வெவிகந்த வைத்தியசாலைக்கு எடுத்து சென்றர்..
வெலிகந்தை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வேனின் சாரதியும் உரிமையாளருமான (சின்ன சேனபுரை நாகூர் ஹாஜியாரின் மகன்) நளீபர் என்பவர் வபாத்தானதாக வைத்தியசாலையிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்துக்கான காரணம் பற்றிய தகவல்கல் எதுவும் இதுவரை தெரியவில்லை. மேலதிக விசாரனைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
