மட்டு குருக்கள்மடத்தில் விபத்துக்குள்ளான சம்மாந்துறையை நோக்கிப் பயணித்த கார்
களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்ப குருக்கள்மடம் பகுதியில் கார் ஒன்று வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த காரே குருக்கள்மடம் முருகன் ஆயத்திற்கு முன்னால் விபத்தில் சிக்கிக்கொண்டுள்ளது விபத்து சம்பவிக்கும்போது காரில் மூன்றுபேர் பயணித்துள்ள நிலையில் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது
விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுக்கின்றனர்
