சுன்னாகத்தில் எட்டுப் பொதுமக்களைக் கடித்த குரங்கார் வசமாக மாட்டினார்!
கடந்த இரு நாட்களாக சுன்னாகத்தில் எட்டுப் பொதுமக்களைக் கடித்ததுடன், பொதுமக்களைத் தொல்லைப்படுத்திய குரங்கு ஞாயிற்றுக்கிழமை (05.10.2025) வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் உத்தியோகத்தர்களால் சாதுரியமாகப் பிடிக்கப்பட்டு வனவளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

