மட்டக்களப்பு தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பு எருவில் பகுதியைச் சேர்ந்த பிரசாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் நேற்று இரவு அலுவலகத்தில் சில பணிகளை நிறைவு செய்ய வேண்டியிருந்ததால், அங்கு தங்கி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இன்று (30) காலை அலுவலகத்துக்குள் சென்ற காவலாளர், பிரசாந்தன் தூக்கிட்ட நிலையில் இருந்ததை கண்டு பொலிசுக்கு அறிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பொலிசார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
