நாரம்மல-குருணாகல் பிரதான வீதியில் சம்பவித்த கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் படுகாயம் அடைந்த மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாரம்மல நகருக்கு அருகில் லொறி மற்றும் பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
