கொல்கத்தா நகரிலுள்ள அரசு மருத்துவமனையில் 13வயது சிறுமியை வன்கொடுமை செய்த நபர்...!!!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரில் உள்ள புகழ்பெற்ற எஸ்.எஸ்.கே.எம். அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வெளிநோயாளி பிரிவில் சிகிச்சைக்காக வந்த 13 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக கொல்கத்தா நகரில் தொடர்ச்சியாக நடைபெறும் இவ்வகை சம்பவங்கள் பொது மக்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன.
சம்பவத்தன்று தம்பதி ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தனர். அவர்களுடன் வந்திருந்த 13 வயது மகள் வெளிநோயாளர் பிரிவில் இருக்கையில் அமர்ந்து காத்திருந்த போது, ஒருவர் இங்கு யாரும் அமரக்கூடாது எனக் கூறி சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
அந்த இடத்தில் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. பரிதாபமாக, அழுதவண்ணம் திரும்பி வந்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததை பகிர்ந்தபோது, அவர்கள் உடனடியாக போலீசாரிடம் புகார் பதிவு செய்தனர்..
