விபத்தில் வவுனியா ஆசிரியர் பலி!
பதவியா - ஹெப்பட்டிப்பொலாவ வீதியில் இடம்பெற்ற விபத்தில் வவுனியா ஆசிரியர் பலி: இருவர் காயம்
பதவியா - ஹெப்பட்டிபொலாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வவுனியா ஆசிரியர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இரு ஆசிரியர்கள் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பதவியா பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கு ஒன்றிற்கு சென்று விட்டு கார் வாகனத்தில் திரும்பிய ஆசிரியர்கள் பதவியா - ஹெப்பட்டிக்கொல வீதியில் உள்ள மகாநெட்டியாவ பகுதியில் பயணித்த போது எதிரே வந்த பிக்கப் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த வவவுனியா மடுக்கந்த ஸ்ரீ தம்மரத்ன வித்தியாதன பிரிவேன ஆசிரியர் சஞ்சீவா அவர்கள் மரணமடைந்தார். மேலும் இரு ஆசிரியர்கள் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் ஹெப்பெற்றிபொலாவா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


