பாலக்காடு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் அர்ஜுன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
சம்பவத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான வகுப்பு ஆசிரியை ஆஷாவும், முதல்வர் லிசியும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் குற்றச்சாட்டுகளின்படி ஆசிரியை ஆஷா, அர்ஜுனை சைபர் செல் மூலம் பயமுறுத்தியதாகவும், ஒரு வருடம் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அர்ஜுன், பள்ளியை விட்டு வெளியேறும் முன் தனது நண்பரை கட்டிப்பிடித்து, "நான் இறந்துவிடுவேன், இனி நாம் சந்திக்க மாட்டோம்" என்று கதறி அழுததாக அவரது சக மாணவர் தெரிவித்தார்.
அர்ஜுனின் பெற்றோர், ஆசிரியையின் மன ரீதியான துன்புறுத்தல் காரணமாகவே அவன் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்....
