வடமராட்சி அல்வாய் குடும்பஸ்தர் திடிரென உயிரிழப்பு !
மூன்று பிள்ளைகளின் தந்தை திடிரென உயிரிழந்த சம்பவம் துயரததை ஏற்படுத்தியுள்ளது ,
இந்தியா தமிழ் நாட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் அல்வாய் தெற்கு பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் இராசலிங்கம் வயது 56 என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
பருத்தித்துறை புலோலியை சொந்த இடமாக கொண்ட வர் அல்வாய் தெற்கு பகுதியில் திருமணம் செய்து மனைவி மூன்று பிள்ளைகளுடன் யுத்தகாலத்தில் 2007 ஆம் ஆண்டு உயிர் அச்சம் காரணமாக இந்தியா சென்று குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார் .
இந்நிலையில் நேற்றைய தினம் வேலை முடித்து வீடு திரும்பியவர் நெஞ்சு வலி காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் மாரடைப்பு
காரணமாக உயிரிழந்துள்ளார் இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
