நைஜீரியா, நைஜர் மாகாணம், பீடாவிலிருந்து அகே நோக்கி கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்ற எரிபொருள் தாங்கியொன்று இன்று (23) காலை எசான் அருகிலுள்ள பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்துள்ளது.
இதையறிந்த அப்பகுதி மக்கள் ஆறாக ஓடிய பெற்றோலை சேகரித்துள்ளனர்.
அப்போது திடீரென அந்த எரிபொருள் தாங்கி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது.
இதில் பெற்றோலை சேகரித்துக் கொண்டிருந்த 35 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
