ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டம் அருகே உள்ள சின்னா டெக்கூர் கிராமத்தில், இன்று (24) அதிகாலையில் ஐதராபாத்திலிருந்து பெங்களூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று இரு சக்கர வாகனத்துடன் மோதியதும், அதன் பெற்றோல் தாங்கி வெடித்ததும் காரணமாக பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் 20 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
பேருந்தில் 42 பயணிகள் பயணித்ததாகத் தெரியவந்துள்ளது.
தீப்பிடித்ததில் 12 பயணிகள் சிறு காயங்களுடன் தப்பியுள்ள நிலையில், அவர்கள் கர்னூல் அரசு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டுள்ளனர்.
விபத்து குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி தெரிவித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என அறிவித்துள்ளார்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் இந்த விபத்தின் மீது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
