மூன்று ஆண்டுகளுக்கு முன், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் இன்றும் பலரை அதிர்ச்சியடைய வைக்கிறது.
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி, தனக்கே தெரியாமல் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து, திடீர் வயிற்று வலியுடன் விடுதியில் அலறியதும், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதும், அங்கு ஒரு அழகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
இந்தச் சம்பவம், பள்ளி, விடுதி, பெற்றோர்கள் என அனைவரையும் கொஞ்சம் கூட சந்தேகிக்காத வகையில் நடந்தது.சம்பவத்தன்று, ராசிபுரம் நாமக்கரை பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கியிருந்த கீதா, நுழைவு வாயிலில் திடீரென வயிற்று வலியால் அலறினார்.
இதை அறிந்த மாணவிகள் மற்றும் விடுதி காப்பாளர் உடனடியாக அவரை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
"மாணவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள். இன்னும் சில நிமிடங்களில் குழந்தை பிறந்துவிடும்" என்று அவர்கள் தெரிவித்தனர். அடுத்த ஐந்து நிமிடங்களில், ஆரோக்கியமான ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு எந்தவித சிக்கலும் இல்லை என மருத்துவமனை உறுதிப்படுத்தியது.இந்தத் தகவல் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினருக்கு தெரிய வந்ததும், அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
உடனடியாக காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. "ஒரு பள்ளி மாணவி கர்ப்பமாக இருந்திருக்கிறாள். இது பற்றி பெற்றோர்களுக்கோ, விடுதி காப்பாளர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ ஒரு சந்தேகம்கூட வரவில்லையா?" என்ற கேள்விகளை குழந்தைகள் நல அலுவலர்கள் எழுப்பினர்.
விசாரணையின்போது, கீதா அளித்த பதில் அனைவரையும் கொலை நடுங்க வைத்தது: "எனக்கு கர்ப்பமாக இருந்தது தெரியவில்லை" என்று அவர் கூறினார்.பள்ளித் தரப்பினரின் அதிர்ச்சி வேறு மட்டத்தில் இருந்தது. கீதா ஒரு கபடி வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 நாட்களுக்கு முன், அவர் கபடி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றிருந்தார். "நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பெண் எப்படி கபடி போட்டியில் விளையாட முடிந்தது? இது எங்களுக்கு புரியவில்லை" என்று பள்ளி நிர்வாகம் அதிர்ச்சியுடன் தெரிவித்தது. மேலும் விசாரணையில், கீதாவின் உறவினர் மகன் ஒருவருடன் அவர் நெருக்கமாகப் பழகியிருந்தது தெரியவந்தது. அந்த மாணவன், அருகிலுள்ள அரசு ஆண்கள் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தவர்.
அவன்தான் இந்தக் கர்ப்பத்திற்குக் காரணம் என்பது உறுதியானது. சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த மாணவன் தலைமறைவான நிலையில் உள்ளான். மாணவனின் பெற்றோர்கள், கீதாவைப் பார்த்துக் கொள்ள மருத்துவமனைக்கு வந்துள்ளனர். கீதாவின் பெற்றோர்களும் அங்கு இருந்தனர்.
குழந்தைகள் நல அமைப்பினர், "மாணவியை காப்பகத்தில் சேர்க்கிறோம். அடுத்தக் கட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்" என்று தெரிவித்தனர். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கீதாவுக்கு கர்ப்ப காலத்தில் எந்தவித மருத்துவ சிகிச்சையும், மாத்திரைகளும், தடுப்பூசிகளும் வழங்கப்படவில்லை.
இருப்பினும், ஆரோக்கியமான முறையில் அழகிய பெண் குழந்தையை அவர் பெற்றெடுத்திருப்பது மருத்துவர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவம், இளம் வயதினரின் உறவுகள், பள்ளி கண்காணிப்பு மற்றும் குடும்ப பொறுப்புகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
காவல்துறை மற்றும் குழந்தைகள் நல அமைப்பு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் விவரங்கள் கிடைக்கும் போது தெரிவிப்போம்.
