அவுஸ்திரேலியாவில் பந்து தாக்கியதில் 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பென் ஆஸ்டின் என்ற வீரரே இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பென் ஆஸ்டின் மெல்போர்னின் கிழக்குப் பகுதியில் உள்ள ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெ கழகத்திற்காக விளையாடி வந்தார்.
இந்நிலையில், கடந்த வந்தார். செவ்வாய்க்கிழமை மாலை, பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தானியங்கி பந்துவீச்சு இயந்திரத்தில் (Automatic Bowling Machine) இருந்து வந்த பந்து, எதிர்பாராதவிதமாக அவரது கழுத்துப் பகுதியில் தாக்கியது.
அவர் தலைகவசம் அணிந்திருந்த போதிலும் இந்த விபத்தில் துரதிர்ஷ்டவசமாக சிக்கிக்கொண்டார்.
பந்து தாக்கியதில் நிலைகுலைந்து போன அவருக்கு மைதானத்திலேயே முதலுதவி வழங்கப்பட்டது. பின்னர் மோனாஷ் வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை பென் ஆஸ்டின் உயிரிழந்ததாக ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கழகம் இன்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
