லொறி மோதி பாடசாலை மாணவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று காலை, கம்பஹா - மினுவாங்கொடை வீதியில் வீதியவத்த சந்தியில் இடம்பெற்றுள்ளது.
அதிக வேகத்தில் பயணித்த லொறி ஒன்று வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் மீது மோதி பின்னர் கார் மற்றும் துவிச்சக்கரவண்டி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த 15 வயது பாடசாலை மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்தையடுத்து லொறியின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்று கம்பஹா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.