🔴 கென்யாவின் கடற்கரை அருகே சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி, 11 பேர் உயிரிழந்துள்ளனர்!
இந்த விமானம், பிரபலமான Diani கடற்கரை விடுதியில் இருந்து Maasai Mara வனப்பகுதிக்கு செல்லும் வழியில், உள்ளூர் நேரப்படி காலை 5.30 மணிக்கு (GMT 2:30) விழுந்ததாக கென்யா சிவில் விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Mombasa Air Safari நிறுவனம், இந்த விமானத்தில் 8 ஹங்கேரியர்கள், 2 ஜேர்மனியர்கள் மற்றும் 1 கென்யா பைலட் பயணம் செய்ததாகவும், அனைவரும் உயிரிழந்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





