ராஜஸ்தானில் தனியார் பேருந்து திடீரெனத் தீப்பிடித்த கோர விபத்தில்10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று , ஜெய்சால்மரில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட தனியார் பேருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் உள்ள தையத் கிராமம் அருகே வந்தவுடன் திடீரென பின்புறத்தில் தீப்பிடித்தது.
சில நிமிடங்களில், பேருந்து முழுவதும் தீ பரவியது. தகவலறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் 10 பேர் உயிரிழ்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் 14 க்கும் அதிகமானோர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ஜோத்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
