ஹம்பேகமுவ வெலிஓயா வீதியில் மலகந்துர சந்திக்கு அருகில், மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் இருந்து வந்த டிராக்டர் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹம்பேகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
மலகந்துரவிலிருந்து மஹபெலஸ்ஸ நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் பலாங்கொடையைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் எம்பிலிபிட்டிய வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹம்பேகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.webp)