தகாத உறவால் பெண்ணுக்கு காத்திருந்த ஆபத்து! இலங்கையில் மீண்டும் அரங்கேறிய சம்பவம்


கண்டி, நாவலப்பிட்டி, இம்புல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி, இம்புல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொலை செய்யப்பட்ட பெண், தனது கணவரிடமிருந்து பிரிந்து, தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபருடன் கம்பளை – புசல்லாவை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த 9 மாத காலமாக ஒன்றாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பெண் கடந்த 22 ஆம் திகதி மீண்டும் தனது கணவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

பின்னர் குறித்த பெண், பணிப்பெண் வேலைக்காக வெளிநாடு செல்லவிருப்பதாக தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபருக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.

ஆனால், தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபர் வெளிநாட்டு வேலைக்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபருக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபர் குறித்த பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை சந்திக்க வருமாறு அழைத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபரை சந்திப்பதற்காக நாவலப்பிட்டி, இம்புல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றிற்கு சென்றுள்ளார்.

இதன்போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறின் போது தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபர் குறித்த பெண்ணை வெட்டிக் கொலை செய்துவிட்டு கம்பளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இதனையடுத்து கம்பளை பொலிஸார் சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.