ஹனிமூனுக்காக கோவாவிற்கு செல்ல செகாந்திராபாத் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏறமுயன்ற புது மாப்பிள்ளை சாய் என்ற 28 வயதுடைய நபர் தவறி தண்டவாளத்திற்கும் ரயிலுக்கும் இடையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக சென்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.இவர் உயிரிழந்தது கூட தெரியாமலேயே அவரின் மனைவி மாதுரி மற்றும் நண்பர்கள் கசேகுடா வரை பயணித்துள்ளனர்.
பொலிஸார் தகவல் தெரிவித்த பின்பே சாய் ரயிலில் ஏறாதது தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.