யாழ். அரியாலை - செம்மணி பகுதியில் இருக்கக்கூடிய சிந்துபாத்தி இந்து மயானத்தில் இடம்பெற்ற படுகொலை தொடர்பில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
குறித்த செம்மணி மயானப்பகுதியில், தற்போது அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த ஜுன் 02ஆம் திகதி வரை அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் இதுவரை 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவற்றில், ஒரு 14 வயதுக்கு உட்பட குழந்தையின் சடலமும் கண்டடுக்கப்பட்டுள்ளது.