அம்பாறை, பதியத்தலாவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
இன்று (06) அதிகாலை 5.15 மணியளவில் பதியத்தலாவ பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் நிலையத்திற்குள்உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் பிபில பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
