காணி அபகரிப்பு தொடர்பாக அண்மையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் இன்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த வர்த்தமானி ஊடாக வடமாகாணத்தில் பாரியளவான காணிகளை சுவீகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
இது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு, இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இன்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் வழங்க, குறித்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் சபையில் இல்லாத நிலையில், அவர் ஒரு வாரத்தில் பதில் வழங்குவதாக தமக்கு அறியப்படுத்தி இருப்பதாக சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.