30 வருடகால யுத்தத்தில் உயிரிழந்த போர்வீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பாராளுமன்ற மைதானத்திற்கு அருகே அமைந்துள்ள போர்வீரர் நினைவுச்சின்னத்திற்கு அருகில் செவ்வாய்க்கிழமை (20) காலை நடைபெற்றது.
இதில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்றிருந்தனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிற கட்சி உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.