முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் வழக்கு தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க நேற்று இது தொடர்பில் வெளியிட்ட ஊடக அறிக்கை குறித்து விசாரிப்பதற்காகவே இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சில சந்தர்ப்பங்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையாகியிருந்ததாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.